அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்படுகிறது.? கறிவிருந்தால் வந்த வினை?? பாஜக பொது.செ ராம ஸ்ரீனிவாசன் அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2022, 12:26 PM IST
Highlights

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைவர் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என தமிழக பாஜக மாநில பொதுச்  செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைவர் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என தமிழக பாஜக மாநில பொதுச்  செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட போகிறார் என  செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார். அண்ணாமலையில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது என்றே சொல்லலாம். இதுமட்டுமின்றி அரசு செய்யும் தவறுகளை உடனுக்குடன் மாநில ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அண்ணாமலை கவனம் ஈர்த்து வருகிறார். மொத்தத்தில் தமிழக அரசியல் என்பது அண்ணாமலையை மையமாக வைத்தே சுழல்வது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர்களான அமித்ஷா, ஜேபி நட்டா போன்றவர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக அண்ணாமலை பாஜகவில் இருந்து வருகிறார். அதேநேரத்தில் மறுபுறம் பாஜகவில் உள்ள சீனியர்கள் அண்ணாமலையின் மீது எரிச்சலில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன, சமீபத்தில் ஜேபி நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரின் சிறப்பு அனுமதி பெற்று அண்ணாமலை  அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: துப்பாக்கி: அவர்கள் பயங்கரவாதத்திற்காக வைத்துள்ளார்கள். நாங்கள் பாதுகாப்புக்காக வைத்துள்ளோம்.. வானதி சீனிவாசன்

இப்படியே போனால் கட்சியின் அடிப்படைக் கொள்கையை அழித்து விடுவார் என கட்சியில் உள்ள சீனியர்கள் கடும் நெரிசலில் இருப்பதாகவும் , எனவே  அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்றவேண்டும் என அவர்கள் மூலமாகவே தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருவதால், திமுக ஆதரவாளர்கள் அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட போகிறார் என மறுபுறம் வதந்தி பரப்பி வருவதாகவும் புகார் எழுத்துள்ளது. இந்நிலையில்தான் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராமஸ்ரீனிவாசன் அண்ணாமலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

தற்போது சில ஆன்லைன் ஊடகங்களில் ஒரு விஷமச் செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் திரு. அண்ணாமலை அவர்கள் விரைவில் மாற்றப்படுவார் என்றும் புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்றும் சில விஷமிகள் செய்து வெளியிட்டு வருகிறார்கள்!!! இது போன்ற செய்திகள் தீய நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் வீச்சாகவும்! வீரியமாகவும்! விரைவாகவும்! வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்...!

இதையும் படியுங்கள்: சாதி, வர்ணம் கைவிடப்பட வேண்டும்.. முடிந்துபோன விஷயம் என கடந்து செல்ல வேண்டும்.. RSS தலைவர் மோகன் பகவத்.

லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கவும் பாரதிய ஜனதா கட்சியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி இது..!!! பாஜகவில் காங்கிரஸ் கட்சி போன்று தலைவர்களை நியமிக்கும் வழக்கம் கிடையாது. திமுக போன்று ஒரு குடும்பத்துக்குள் மட்டுமே தலைவரை தேடுகிற தகுதியற்ற கட்சியும் கிடையாது.

அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை குவிக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணாமலை அவர்கள் பாஜகவின் தலைவர் மட்டுமல்ல தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என்பதை எதிரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்!!! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!