ஏழைகளுக்கு தேவை வாய்ப்பு ; சலுகைகள் அல்ல – பிரதமர் மோடி பேச்சு...

Asianet News Tamil  
Published : Mar 12, 2017, 07:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
ஏழைகளுக்கு தேவை வாய்ப்பு ; சலுகைகள் அல்ல – பிரதமர் மோடி பேச்சு...

சுருக்கம்

The poor are likely to need Not privileges - Narendra Modi

ஏழைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தேவைப்படுவது வாய்ப்புகள் தானே தவிர சலுகைகள் அல்ல எனவும், வாய்ப்புகள் கொடுத்தால் அவர்கள் தானே முன்னேறிக் கொள்வார்கள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி., உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதையடுத்து டெல்லியில், பாரதிய ஜனதா ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :

உ.பி., உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.கவை வெற்றி பெற வைத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பா.ஜ.கவின் வெற்றி புதிய இந்தியாவை உருவாக்கும்.

அதிகாரம் என்பது பதவியை பற்றியது அல்ல. அது மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு.

ஏழைகள் வாய்ப்புகளையே விரும்புகிறார்கள். சலுகைகளை அல்ல.

நடுத்தர மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமையை குறைப்பதால் வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ச்சி என்பதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

அதிக வாக்குகள் பதிவான சூழலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது.

5 மாநில சட்டபேரவை தேத்தல் முடிவுகள் புதிய இந்தியாவை உருவாக்கி வருவதை காட்டுகின்றன.

தேர்தல் முடிவுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?