நாளை மறுநாள் ஆர்.எஸ்.எஸ் பேரணி கிடையாது -  அனுமதிக்கு ’நோ’ சொன்ன காவல்துறை...! 

First Published Oct 6, 2017, 6:36 PM IST
Highlights
The police denied permission to the RSS rally which was scheduled for tomorrow after the law and order problem.


சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரி நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் கொண்டாடப்பட உள்ளது. மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

மதுரை, ராமராயர் மண்டபம், மதிச்சியம் என்ற இடத்தில் இந்த ஊர்வலம் துவங்க உள்ளது. இதுகுறித்த நோட்டீஸில் செல்லூர் ராஜுவின் பெயர் இடம் பெற்றுள்ளது. 

அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவங்கி வைக்க உள்ளதாக வந்த வந்த தகவலை அடுத்து, எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி  கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜு இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில், மதுரையில்  அக்.,8ல்   நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பதாக நான் யாரிடமும் கூறவில்லை என்றும் தன்னை கேட்காமலேயே ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அழைப்பிதழில்  பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரி நாளை மறுநாள் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

click me!