
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு கொறடா உத்தரவை மீறியும் ,அரசுக்கு எதிராகவும் வாக்களித்த 12பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவில்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்ட 6பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து சசிகலா ஜெயிலுக்கும் எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றனர்.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வம் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் எடப்பாடியுடன் கூட்டணி சேர்ந்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை நீக்க கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
கொறடா உத்தரவை மீறியதால் சபாநாயகர் அவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இதனிடையே இரட்டை இலையை மீட்க எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து மிகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வந்தார். மேலும் தன்னை கேட்டி எடப்பாடி எல்லா முடிவையும் எடுக்கிறார் எனவும் பேட்டி அளித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு கொறடா உத்தரவை மீறியும் ,அரசுக்கு எதிராகவும் வாக்களித்த 12பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவில்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்ட 6பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.