
பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும்.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான விருதுகள் யார் யாருக்கென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை நேற்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு, பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என தெரிவித்தார்.