தமிழக மக்களே இன்னும் கூட ஓயவில்லை மழை.. அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2020, 3:54 PM IST
Highlights

இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாக கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் (9-12-2020) தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாக கூடும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசபாக்கம் (திருவண்ணாமலை) 7 சென்டிமீட்டர் மழையும், ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) கடலூர் தல 6 சென்டி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) அகரம், சீகூர் (பெரம்பலூர்) நெய்வேலி, வந்தவாசி (திருவண்ணாமலை) காட்டுமன்னார்கோயில் (கடலூர்) தலா 5 சென்டி மீட்டர் மழையும், கொள்ளிடம், பாபநாசம் (திருநெல்வேலி) திருத்தணி (திருவள்ளூர்) சிதம்பரம் (கடலூர்) திருமங்கலம் (மதுரை) குடியாத்தம், வெள்ளூர், குடவாசல் (திருவாரூர்) புதுச்சேரி, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) விரிஞ்சிபுரம் (வேலூர்) உத்தமபாளையம் (தேனி) தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
 

click me!