ஆ.ராசாவை தூக்கி உள்ள வைக்காமல் விடாதுபோல அதிமுக.. சட்ட நடவடிக்கைகளில் தீவிரம், போலீஸ் DGPயிடம் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2020, 3:18 PM IST
Highlights

மேற்படி திரு ஆ. ராசா அவர்களின் செய்தியாளர்கள் பேட்டி பெண்களை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி அனைவரின் பார்வையிலும் அவரது பேச்சு தனி மனித ஒழுக்கமின்றி, உண்மைக்கு மாறான செய்திகளை கூறு பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் உள்ளது.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் இழிவாக பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் திருமாறன் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் முழுவிபரம்: 

இமாலய 2ஜி ஊழல் வழக்கில் சுமார் ஒரு லட்சத்து 75 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த காரணத்துக்காக ஊழல் வழக்கை சந்தித்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின்  திரு. ஆ. ராசா எம்பி, நேற்றைய முன் தினம் 5 -12 -2020 செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.கே.பழனிச்சாமி அவர்கள் மீதும், தன் மீது உள்ள கறைபடிந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தனிநபர் ஒழுக்கமின்றி தரம் தாழ்ந்த முறையில், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பேட்டி அளிக்கின்ற முறையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேற்படி செய்தியாளர் சந்திப்பின்போது திரு ஆ.ராசா தெரிவித்த கருத்துக்கள் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததோடு மட்டுமின்றி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.கே பழனிச்சாமி அவர்களையும் ஒருமையில் பேசி பொய்யான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். மேற்படி திரு ஆ. ராசா அவர்களின் செய்தியாளர்கள் பேட்டி பெண்களை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி அனைவரின் பார்வையிலும் அவரது பேச்சு தனி மனித ஒழுக்கமின்றி, உண்மைக்கு மாறான செய்திகளை கூறு பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் உள்ளது. 

மேலும் அவரது பேச்சு வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்கின்ற அடிப்படையில், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குள்ளானவையாகும், மேலும் நேற்றைய தினம் 6-12-2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ஒருமையில் பேசி மீண்டும் மீண்டும் பொய்யான தகவல்களை கூறி வருகின்றார். அதனுடைய ஒலி-ஒளி வடிவத்தின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!