"உங்காத்தாமாறியே ஊழல் செய்வாரா எடப்பாடி"... ஆ.ராசாவின் தெனாவெட்டு பேச்சுக்கு ஆப்பு வைத்த அதிமுக...!

Published : Dec 08, 2020, 02:17 PM IST
"உங்காத்தாமாறியே ஊழல் செய்வாரா எடப்பாடி"... ஆ.ராசாவின் தெனாவெட்டு பேச்சுக்கு ஆப்பு வைத்த அதிமுக...!

சுருக்கம்

அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர். மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு திரிகிறாயே? அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா? என்று ஆவேசமாக பேசி இருந்தார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் புகார் அளித்துள்ளார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும் 2ஜி வழக்கை குறிப்பிட்டு, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கொள்ளையடித்த கட்சி திமுக என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த ஆ. ராசா, முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க தயாரா என்று கேட்டார். பின்னர், 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில், நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது . இன்னும் எடப்பாடிபழனிசாமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா ?உங்கள் பதவிக்கு இது அழகா? உங்காத்தா கொள்ளை செய்து ஜெயிலுக்கு போனவர். 

அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர். மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு திரிகிறாயே? அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா? என்று ஆவேசமாக பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வரை அவதூறாக பேசியதாக சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது . அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் செல்வகுமார், கோவிந்தராஜன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!