ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.. ஜெ மறைவோடு முடிந்துவிட்டது. அடித்து சொல்லும் ரவிக்குமார் MP.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 9:09 AM IST
Highlights

விசிக வெற்றி  பெற்றிருப்பதோடு விசிக இடம்பெற்ற திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. கடந்த 4 மாத காலமாக நடைபெற்றுவரும் திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்று மட்டுமின்றி திமுக- விசிக கூட்டணிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமும் ஆகும். 

ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றும், ஜெ மறைவோடு அது முடிந்துவிட்டது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்து பின்வருமாறு, ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விசிக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. 3 மாவட்ட கவுன்சிலர்கள்; 27 ஒன்றிய கவுன்சிலர்கள்; 50 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் என சிறப்பான வெற்றியை விசிக பெற்றுள்ளது. நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக விசிக வெற்றி பெற்றிருப்பது அது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சி என்ற பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்திருக்கிறது.

 

இதையும் படியுங்கள்: ஜெ நினைவிடத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகும் சசிகலா.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

விசிக வெற்றி  பெற்றிருப்பதோடு விசிக இடம்பெற்ற திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. கடந்த 4 மாத காலமாக நடைபெற்றுவரும் திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்று மட்டுமின்றி திமுக- விசிக கூட்டணிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமும் ஆகும். விசிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பது மீண்டும் உறுதிப்பட்டிருக்கிறது. 

இந்தத் தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் படுதோல்வி நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைப்போலவே இந்தத் தேர்தலிலும் ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை, விசிக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்த ஆதிதிராவிட மக்களும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. 

இதையும் படியுங்கள்: ஜெ நினைவிடத்தில் மையம் கொள்ளும் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்.. உளவுத்துறை High Alert. பாதுகாப்புக்கு 3000 போலீஸ்.

மீண்டும் அவர்களை அதிமுகவை நோக்கி ஈர்க்கக்கூடிய சாதியைக் கடந்த தலைவர்கள் அங்கு எவரும் இல்லை, இனிமேல் உருவாகும் வாய்ப்பும் இல்லை.ஆதிதிராவிட மக்களை அரசியல் சக்தியாகத் திரட்டுவதில் மட்டுமின்றி, சாதிகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெறுவதிலும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் பெற்றிருக்கும் வெற்றி அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் உழைப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம். தேர்தல்முறை நடைமுறைக்குவந்த கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தலித் தலைவர்கள் எவரும் செய்யாத சாதனை.என பதிவிட்டுள்ளார். 

click me!