லெட்டர் போட்ட பள்ளி மாணவி… போன் போட்டு முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘சூப்பர்' பதில்

By manimegalai aFirst Published Oct 15, 2021, 10:27 PM IST
Highlights

பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லெட்டர் எழுதிய மாணவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பதில் தெரிவித்துள்ளார்.

சென்னை: பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லெட்டர் எழுதிய மாணவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பதில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் 6ம் வகுப்பு மாணவி பிரஜ்னாவுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓசூர்,டைட்டன் டவுன்ஷிப்பை சேர்ந்த ரவிராஜன், உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா பள்ளிகளை திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தல் குறிப்பிட்டு இருந்த அவரது தொலைபேசி எண்ணுக்கு இன்று (15.10.2021) தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.

அப்போது நவம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,அப்படி திறக்கப்படும் போது அம்மாணவி பள்ளிக்கு செல்லலாம், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார் என்று அந்த அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!