இனி அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை... தாறுமாறாக கணிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்..!

By Asianet TamilFirst Published Oct 15, 2021, 10:28 PM IST
Highlights

அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை என்று சொல்லும் வகையில் இத்தேர்தல் அமைந்துள்ளது என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விருதுநகரில் நடந்து உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயர்தான் அதற்கு காரணம். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக திமுகவின் வெற்றி அமைந்துள்ளது. 2019-இல் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதுகூட உள்ளாட்சித் தேர்தலில் திமுக 50 முதல் 60 சதவீத வெற்றியைப் பெற்றது.
 ஆனால், இந்த ஐந்து மாத காலத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியைச சந்தித்திருக்கிறது. அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை என்று சொல்லும் வகையில் இத்தேர்தல் அமைந்துள்ளது. திமுகவுக்குக் கிடைத்த இந்த வெற்றி ஆட்சி, அதிகாரத்தால் கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தத் தேர்தலில் எந்த இடத்தில் தகறாறு, பிரச்சினை நடந்தது என ஏதாவது ஒரு இடத்தை உங்களால் கூற முடியுமா?
அப்படிக் கூறினால் நாங்கள் ஏற்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகத்தான் நடந்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் முன்னாள் அமைச்சர்கள் பேசி, அக்கட்சியின் தலைமையிடம் தப்பிக்கப் பார்க்கிறார்கள்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

click me!