உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக..! ரஜினியை பற்றி பேசாத ராமதாஸ்...! 

 
Published : Jan 04, 2018, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக..! ரஜினியை பற்றி பேசாத ராமதாஸ்...! 

சுருக்கம்

The partys founder Ramadoss said that the proletariat party will contest in the local elections in Tamil Nadu.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.

இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. 

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு பேசினர். 

அப்போது துணை முதலமைச்சர் பன்னீர் பேசுகையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாகம நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவித்தார். 

மேலும் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!