தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமாக செலவழித்த கட்சி.. ரூ.114 கோடி செலவு செய்து திமுக முதலிடம்..!

By Asianet TamilFirst Published Oct 4, 2021, 9:43 PM IST
Highlights

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ரூ. 114.11 கோடியும் அதிமுக ரூ. 57.05 கோடியும் செலவழித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக-தேமுதிக உள்ளிட்ட கூட்டணிகள் களமிறங்கியிருந்தன. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக மட்டும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் தனித்து 66 தொகுதிகளில் வென்றது. 
இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் செலவழித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. அதில், அதிகபட்சமாக திமுக 114 கோடியே 11 லட்ச ரூபாயைச் செலவழித்திருக்கிறது. அதிமுக 57 கோடியே 5 லட்ச ரூபாயைச் செலவழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல பிற கட்சிகளும் செலவினங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளன. பாஜக மட்டும் தேர்தல் செலவு விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

click me!