மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளதால் திமுக வெற்றி உறுதி... கெத்து காட்டும் ஸ்டாலின்...!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 8:56 AM IST
Highlights

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியில் இல்லை, அதிருப்தியில் இல்லை என்றார். 

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் தெரிவித்துள்ளனர் என வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்குச்சாவடி வரும் போதே தொண்டர்களிடம் தான் அமைதியான முறையில் வாக்களிக்க விரும்புவதாகவும், மக்களோடு, மக்களாக நின்று வாக்களிக்க உள்ளதால் யாரும் கூட்டம் கூட வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு முதன் முறையாக முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள மு.க.ஸ்டாலின் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று குடும்பத்துடன் வாக்களித்தார். வாக்குப்பதிவிற்கு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகளுடன் தங்களது கையில் உள்ள அடையாள மையை காண்பித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். 

 இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன். மே-2 ம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என்பது உறுதி.

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியில் இல்லை, அதிருப்தியில் இல்லை என்றார். எந்த தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்பது என்னை ஊடகத்தினருக்குத்தான் அதிகம் தெரியும். நீங்களே சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.

வாக்குப்பதிவிற்கு முன்னதாக மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

click me!