தமிழ்நாட்டில் பாஜக வளர.. தீவிர இந்துத்துவாவை கையில் எடுப்பதே ஒரே வழி.. மூத்த பத்திரிக்கையாளர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2022, 11:08 AM IST
Highlights

தேர்தலுக்கு முன்பாக பாஜகவை நோக்கி மக்களை திரும்பிப் பார்க்க வைத்த சில விஷயங்கள் படிப்பினைகளை தந்திருக்கிறது. கொரோனாவை காரணம்காட்டி மூடப்பட்ட கோவில்களை திறக்க அண்ணாமலை நடத்திய போராட்டம், கோயில் உடைப்பு மற்றும் கோயில்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக லாவண்யா விஷயத்தில் அண்ணாமலை காட்டிய தீவிரம்,

தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை எடுத்த முடிவு  மிகச் சரியான முடிவு என மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிர  இந்துத்துவாவை முன்னெடுப்பதால் மட்டுமே தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியும் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கால்பதிக்க  வேண்டுமென பல ஆண்டுகளாக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அக்காட்சி எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தோம் அவைகள் பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை, ஆனாலும் அதன் முயற்சி தீவிரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேவேளையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் அக்கட்சியால் பெற முடிந்தது. ஆனால் இடப் பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால்  நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. அதிமுக-பாஜக பிரிவு திமுகவுக்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வழக்கத்துக்கு மாறாக அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்த பாஜக சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் 19 வார்டுகளில் அதிமுகவை 3-வது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது பாஜகவுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்பதுடன், அதிமுகவின் இடத்தை பாஜக கைப்பற்றி விட்டதோ என்ற கேள்வியை எழிப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக தனித்து போட்டியிட்டு மொத்தம் 309 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் அதிகமாகும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 11 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது பாஜக. திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், சென்னை, கடலூர்,  காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும் பாஜக வாகை சூடியுள்ளது.

அவர்களில் 9 பேர் பெண்கள் ஆவர், இந்த வெற்றிகளின் மூலம் தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் 22 வார்டுகளில் பாஜக கால் பதித்துள்ளது. கடந்த 2011 ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 4-வார்டு களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 56 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது, குமரிமாவட்ட நகராட்சிகளில் 21 வார்டுகளிலும், தென்காசி மாவட்டத்தில் 12 வார்டுகளிலும், தேனி மாவட்டத்தில் 4 வார்டுகளிலும், ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டங்களில் தலா 3 வார்டுகளிலும், ஈரோடு மாவட்டத்தில் 2 வார்டுகளிலும், கரூர், கிருஷ்ணகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர்,  திருப்பத்தூர்,  தூத்துக்குடி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. பேரூராட்சிகளை பொருத்தவரையில் 234 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதில் அதிகபட்சமாக 168 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கைப்பற்றியுள்ளது. சென்னையில் பாரதிய ஜனதா கட்சி 198 வார்டுகளில் போட்டியிட்டு 2 லட்சத்து 14245  வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதாவது சென்னையில் 8.04  சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மாநகராட்சியில் பதிவான வாக்குகளை விட பதிவாகாத வாக்குகளே அதிகம், மொத்தம் 43 சதவீதம் பேர்  மட்டுமே வாக்களித்திருந்தனர், கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை, பெருமளவில் அத்தனைபேரும் வாக்களித்திருந்தால் அல்லது அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து சேர்ப்பதை பாரதிய ஜனதா சரியாக செய்திருந்தால், தென் சென்னை பகுதியிலும் மத்திய சென்னை பகுதியிலும் ஏன் வட சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அதனால் பெற்றிருக்க முடியும். குறைந்தது இன்னும் ஒரு 5 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சிநால் பெற்றிருக்க முடியும், சென்னை மாநகராட்சியில் 19 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி  இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றியை பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சியின் வட சென்னை முதல் தென் சென்னை வரை வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. தென் சென்னைக்கு மட்டுமே உரிய கட்சியாக பாஜக பார்க்கப்பட்ட நிலையில் அதன் வெற்றி தற்போது பரவலாக இருக்கிறது. 

இனி எவரும் அது ஒரு ஏரியாவுக்கான கட்சி என  சித்தரிக்க முடியாது. முதல்முறையாக தமிழ்நாட்டுக்கான கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது என்பதை இந்த தேர்தல் பதிவு செய்திருக்கிறது. தெற்கில் பாஜகவின் இந்த வளர்ச்சி நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. அதேபோல் தனித்துப் போட்டியிடுவது என்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் முடிவு மிக சரியாக முடிவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் வெறும் 10 சதவீத இடங்களை தான் அதிமுக வழங்கியிருக்கும், அந்த 10 சதவீத இடங்களில் பாஜக எந்தெந்த இடங்களில் வெற்றி பெறும் என்பது சந்தேகமே, எனவே துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து தனித்துப் போட்டியிடுவது என முடிவெடுத்த அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி என்றும் இதை கூறாலம். இதேபோல் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை நோக்கி மக்களை திரும்பிப் பார்க்க வைத்த சில விஷயங்கள் படிப்பினைகளை தந்திருக்கிறது. கொரோனாவை காரணம்காட்டி மூடப்பட்ட கோவில்களை திறக்க அண்ணாமலை நடத்திய போராட்டம், கோயில் உடைப்பு மற்றும் கோயில்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக லாவண்யா விஷயத்தில் அண்ணாமலை காட்டிய தீவிரம்,

லாவண்யா விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி கையிலெடுத்த டைமிங், இவையெல்லாம் இந்த வெற்றியின் அடி கற்களாகும். சென்னையில் வெற்றிபெற்ற பாஜகவின் ஒரே கவுன்சிலரான உமா ஆனந்தன் கூட ஒரு தீவிர இந்து பற்றாளர், அவர் ஒரு ரடிகல் இந்துத்துவாவாதி, அத்தனை வேட்பாளர்களில் அவரால் தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இவையெல்லாம் பாரதிய ஜனதாவிற்கு உணர்த்துகிற பாடம் என்னவென்றால்? தமிழகத்தில் தீவிர இந்துத்துவாவை முன்னெடுத்தால்தான் களம் இளகும், வெற்றி  கனியும்...  உத்திர பிரதேசத்திலும் திரிபுராவிலும் வேரூன்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி செய்த அத்தனை உத்திகளையும் தமிழகத்தின் தயங்காமல் செய்ய வேண்டும் அண்ணாமலை. இவ்வாறு கோலாகல சினிவாசம் கூறியுள்ளார்.
 

click me!