ஏ.சியா? கதிரா..? வேலூரில் பரமபத விளையாட்டு... பதற்றத்தில் அதிமுக- திமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2019, 1:26 PM IST
Highlights

வேலூர் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்கிற பதற்றம் இரு கட்சியினருக்கும் இடையே தொற்றிக் கொண்டுள்ளது.  

வேலூரில் மொத்தம் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. 1432,555 மொத்த வாக்களர்களில் 10,23,352 பேர் தங்களது வாக்குகளை பதிவிட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது அதன்பின் இயந்திர வாக்குப்பதிவு எண்ணப்பட்டது.

துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். அதன் பின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் தொடங்கினார். இரண்டு வேட்பாளர் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இரண்டு சுற்றுக்கு பின்பு நான்காம் சுற்றில் அதிமுக மீண்டும் முன்னிலை பெற்று வந்தது. அதில் அதிமுக ஏ.சி.சண்முகம் 9,032 வாக்குகளும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 94,873 வாக்குகள் பெற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கியது. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் சுற்றில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி  10802 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த்  முன்னிலை வகிக்கிறார்.

கதிர் ஆனந்த் - 4040,044 வாக்குகள், ஏ.சி.சண்முகம் - 3,93242 வாக்குகள், தீப லட்சுமி நாம் தமிழர் கட்சி - 22,003 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்பட இருகிறது. இதனால், வேலூர் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்கிற பதற்றம் இரு கட்சியினருக்கும் இடையே தொற்றிக் கொண்டுள்ளது.  

click me!