வேலூர் மக்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
வேலூர் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
undefined
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது. இதனையடுத்து 10 சுற்றுகள் முடியும் வரை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,15,448 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,99,368 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 16,454 வாக்குகள் பெற்றிருந்தனர். தற்போது, 12-வது சுற்று முடிவில் சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், இருகட்சிகளுக்கு இடையேயான போட்டி கடுமையாகி உள்ளது. வேலுார் தேர்தல் முடிவுகளால், ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. எனினும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமை தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.