CM Stalin family: ஸ்டாலின் குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு? உதய் தொகுதியில் ரவுண்டடிக்கும் கிருத்திகா.

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 10:55 AM IST
Highlights

குதிரைகளை கொண்டு வாழ்வு நடத்தி வரும் குதிரை உரிமையாளர்களின் தேவைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து வருவதாகவும், வரும் நாட்களில் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பில் எடுக்கப்படும் என்றும் கிருத்திகா உதயநிதி தெரிவித்தார்.

குடும்பத்தில் ஒருவர் அரசியலில் இருந்தால் போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என முதல்வர் ஸ்டாலின் மருமகளும், உதயநிதியின் மனைவியுமாகிய கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து வரும் நிலையில் உதயநிதி போலவே அவர் அரசியலில் ஈடுபடப் போகிறார் என பேச்சு அடிபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.முன்னதாக, தனது வாரிசுகள்யாரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என ஸ்டாலின் கூறி வந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின். பதவிக்காகவோ, புகழுக்காகவோ  தான் அரசியலுக்கு வரவில்லை, திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் எனக்கூறிதான் அரசியலில் அடியெடுத்து வைத்தார் உயதநிதி. பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கட்சித் தொண்டர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். 

அதைத்தொடர்ந்து திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்த அவர் கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்காகவே இதை ஏற்கிறேன் என்றார். இனி அடிக்கடி திமுக மேடைகளில் தன்னை பார்க்க முடியும் என்றும் அப்போது அவர் கூறினார். அப்போதே வாரிசு அரசியல் திமுகவில் மீண்டும் தலைதூக்கி விட்டது என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர். ஆனாலும் அதை திமுக பொருட்படுத்தவில்லை, அதைத்தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் திடீரென சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் உதயநிதி. அதில் பல சீனியர் சட்டமன்ற உறுப்பினர்களையே விஞ்சும் அளவிற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றார் அவர். இப்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும்கூட முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்படுகிறார் அவர். பல சீனியர் அமைச்சர்களே சட்டமன்றத்தில் உதயநிதியின் புகயை பாடிவிட்டுதான் தங்களது உரையை தொடங்குகின்றனர். கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அவருக்கு அதிக மரியாதை அவையில் வழங்கப்படுகிறது இப்போதும் விவாத பொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார் திமுக எம்பி ராஜேஷ்குமார், அண்ணனி உதயநிதி வெல்க என நாடாளுமன்றத்தில் பேசியது அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நண்பரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என வெளிப்படையாக பேசி வருகிறார். உதயநிதி அமைச்சராவது எப்போது என்ற கேள்வி பரபரப்பாக திமுகவில் இருந்து வரும் நிலையில், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி அரசியலில் இறங்கப் போகிறார் என்ற பேச்சிக்களும் உலாவருகிறது. இந்நிலையில்தான் சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்  குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ சேவை முகாம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின்  மனைவி கிருத்திகா உதயநிதி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான குதிரைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன் 80 க்கும் மேற்ப்பட்ட குதிரைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் தடுப்பூசிகளும், குதிரையின் உரிமையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டது. மேலும்  குதிரைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கிருத்திகா உதயநிதி  குதிரையின் உரிமையாளர்களுக்கு வழங்கினார்.  

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா:- சென்னை மெரினா கடற்கரையில் குதிரைகளை கொண்டு வாழ்வு நடத்தி வரும் குதிரை உரிமையாளர்களின் தேவைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து வருவதாகவும், வரும் நாட்களில் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பில் எடுக்கப்படும் என்றும் கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். மேலும் குடும்பத்தில் ஒருவர் அரசியலில் இருந்தால் போதும் அரசியலில்  ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்றார். ஏறகனவே உதய நிதியும் இப்படித்தான் கூறி வந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ரேஞ்சிக்கு அவரை கட்சிக்காரர்கள் கொண்டாடி வருகின்றனர். கிருத்திகாவும் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம் யார் தடுக்க போகிறார்கள் என்ற பலர் பேசி வருகின்றனர். 

click me!