இப்போதைக்கு புதுக்கட்சிதான் …. உண்மையை உடைத்துப் பேசிய தங்க தமிழ்செல்வன் !!

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 08:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
இப்போதைக்கு புதுக்கட்சிதான் …. உண்மையை உடைத்துப் பேசிய தங்க தமிழ்செல்வன் !!

சுருக்கம்

the new paln for TTV Dinakaran is open a new party

உள்ளாட்சித்  தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெற்று இரட்டை இலையை மீட்போம் என்றும், அதிமுகவை கைப்பற்றுவதற்கான ஒரே வழி புதுக்கட்சி தொடங்குவதுதான் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்

தேனியில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தங்க தமிழ்செல்வன்,  18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும்,  அனைவரும் தினகரனுடன் சட்டசபைக்குள் செல்வோம் என்றும் தெரிவித்தார்.

பேருந்து கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்களை பொதுமக்கள் விரட்டியடிப்பர் என்று தெரிவித்த தங்க தமிழ்செல்வன், .புது கட்சி தொடங்க தினகரன் தயாராகி வருவதாக கூறினார்.

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் என்றும் தங்க தமிழ்செல்வன் கூறினார்..



தேனியில் விண்ணப்பத்தை பெற்று ஜெ., பிறந்தநாள் அன்று புதிய கிளை நிர்வாகிகள் பெயர்கள் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். அதுவரைக்கும் தான் இந்த புதிய கட்சித் திட்டம், என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!