எடப்பாடி கார்ல CM-ன்னு ஒட்டியிருக்கிறதுக்கு காரணம் இதுதானாம்...! போட்டு தாக்கிய முன்னாள் அமைச்சர்...! 

 
Published : Jan 29, 2018, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
எடப்பாடி கார்ல CM-ன்னு ஒட்டியிருக்கிறதுக்கு காரணம் இதுதானாம்...! போட்டு தாக்கிய முன்னாள் அமைச்சர்...! 

சுருக்கம்

This is the reason why car has joined the CM!

தமிழக மக்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமியை CM ஆக மதிப்பதில்லை எனவும் அதனால் தான் அவரது காரில் தானாகவே CM என ஒட்டியிருக்கிறார் எனவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சி.எம். என்ற எழுத்துகளுடன் கூடிய பதிவெண் கொண்ட புதிய காரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அவரது புதிய வாகனத்தின் பதிவெண்ணில் சிஎம் என்ற ஆங்கில எழுத்துகள் வருகிறது. முதலமைச்சர் என்று பொருள் வரும்படியான பதிவெண்ணை முதலமைச்சருக்காக பிரத்யேகமாக மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புதிய காரின் பதிவெண் TN 07 CM 2233 என்று உள்ளதால், அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.அதே போன்று,இது அவருக்கு செண்டிமென்டாக இருக்கும் என  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தமிழக மக்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமியை CM ஆக மதிப்பதில்லை எனவும் அதனால் தான் அவரது காரில் தானாகவே CM என ஒட்டியிருக்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்று செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!