கட்சி வேணும்...! பதவி வேணாம்..! செயல்தலயை மிஞ்சும் திமுக வாரிசு...! 

 
Published : Jan 29, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
கட்சி வேணும்...! பதவி வேணாம்..! செயல்தலயை மிஞ்சும் திமுக வாரிசு...! 

சுருக்கம்

udhayanidhi stalin says about politics entry

கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன் எனவும் பதவிக்காக நான் வரவில்லை எனவும் திமுக செயல்தலைவரின் மகன்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதலில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

அதன் பிறகு நடிகராக அவதாரமெடுத்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் நடிகராகி பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இப்போராட்டத்தின்போது உதயநிதி முன்னிலைபடுத்தப்பட்டார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.

வரும் சட்டசபைத் தேர்தலில் இருந்து நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன் தமிழகம்  முழுவதும் ரசிகர் மன்றத்துக்கு ஆதரவாக புதிய அமைப்புகளை தொடங்கி வருகிறார்.

இந்நிலையில் அரசியல் குறித்து வெளிப்படையாக பேட்டி கொடுத்து அதிர வைத்து வருகிறார் உதயநிதி. 

இன்று அலங்கா நல்லூரில் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன் எனவும் பதவிக்காக நான் வரவில்லை எனவும் தெரிவித்தார். 

நான் அரசியலுக்கு திடீரென்று வரவில்லை எனவும் பிறந்ததில் இருந்தே அரசியலில் உள்ளேன் எனவும் குறிப்பிட்டார். 

கமல், ரஜினி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் எனவும் என்னுடையை படப்பிடிப்புகள் அனைத்தும் அரசியலை சார்ந்தே அமையும் எனவும் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!