ஆட்சியாளர்களின் மெத்தனமே உயிரிழப்புகளுக்கு காரணம்... அண்ணாமலை குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published May 16, 2023, 7:21 PM IST

ஆட்சியாளர்களின் மெத்தனமே உயிரிழப்புகளுக்கு காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


ஆட்சியாளர்களின் மெத்தனமே உயிரிழப்புகளுக்கு காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றனர். முப்பதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச் சாராயத்திற்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, தமிழகம் முழுவதும் 1558 கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து, பல ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தைப் பறிமுதல் செய்திருக்கிறது தமிழக காவல் துறை.

இதையும் படிங்க: மதுவிலக்கு விவகாரம்; அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் - திருமாவளவன் அறிவிப்பு

Tap to resize

Latest Videos

இத்தனை கள்ளச் சாராய வியாபாரிகள் விவரங்கள் தெரிந்திருந்தும், கள்ளச் சாராயம் விற்பவர்கள் யார், விற்பனை எங்கே நடக்கிறது என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்காமல் இத்தனை நாட்கள் அனுமதித்து விட்டு, தற்போது கண்துடைப்புக்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது வெட்கக் கேடு. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு? மரக்காணம் துயரச் சம்பவத்தில், மரூர் ராஜா எனும் சாராய வியாபாரியின் பெயர் வெளிப்பட்டிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த இவர், திண்டிவனம் 20 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவரின் கணவர் ஆவார். சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இவர் மேல், பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டிலேயே சாராய விற்பனை தொடர்பாக இவர் மேல் வழக்கு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சர்க்கஸ் பார்க்க வேண்டுமா...? அப்ப இதை பாருங்க” காங்கிரஸ் கட்சியை கலாய்த்த பாஜக

அது போக, பல்வேறு குற்ற வழக்குகளும் இவர் மேல் இருக்கின்றன. இந்த மரூர் ராஜா, அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையைத் தொடர்ந்து வந்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம், காரில் சாராயம் கடத்திய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனினும், அமைச்சரின் நெருக்கத்தால், சிறையில் இருந்தபடியே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிய வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!