அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமியையும் அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதில் ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. மேலும் அதிமுக தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிந்த பிறகு தான் தேர்தலில் போட்டியிட முடியும் என மாற்றப்பட்டது. மேலும் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் சட்ட போராட்டங்கள் நடத்தினார்.
undefined
எடப்பாடியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் சட்ட விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்படுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்