நாடாளுமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்க நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்து ஒருங்கிணைந்து செயல்பட இருப்தாக அறிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சந்திப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என கடுமையாக விமர்சித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பும் பதிலடி கொடுத்திருந்தது. இதனையடுத்து நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
undefined
மாவட்ட செயலாளர்கள் கூட்டதிற்கு அழைப்பு
கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் . டிடிவி தினகரனை - ஓ.பி.எஸ் சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும் அதிமுகவில் புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது உள்ள நிலை குறித்து கருத்து கேட்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கும் மாவட்ட செயலாளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது அதன் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பூத் கமிட்டி - ஆலோசனை
ஓபிஎஸ் சார்பாக திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மதுரையில் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடைபெறவுள்ளது. எனவே இந்த மாநாட்டிற்கான 3 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து எந்த இடத்தில் மாநாடு நடத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கிடுக.! தமிழக அரசுக்கு கோரிக்கை விடும் ராமதாஸ்