
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. முஸ்லீம்களும் ராமர் பக்தர்களாகிவிட்டனர் என பாஜக எம்.பி. சாக் ஷி மஹராஜ் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதே மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. சாக் ஷி மஹராஜ், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, ஏதாவது ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு வருவது வழக்கம்.
அதேபோல், தற்போது, செய்தியாளர்களை சந்தித்து புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். லக்னோவில் அவர், செய்தியாளர்களிடம் சாக் ஷி மஹராஜ் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை, இந்த உலகத்தில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, முஸ்லீம் மக்களும் பெரிய அளவில் ஆதரவு அளிக்கின்றனர்.
ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்து வந்த முஸ்லீம் மக்கள் அனைவரும், தற்போது ராமர் பக்தர்களாகிவிட்டனர். அயோத்தியில், ராமர் கோவில் இருந்ததா அல்லது பாபர் மசூதி இருந்ததா என்று இங்கு விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.