AIADMK : வரப்போகின்ற உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் முடங்கி போயிருப்பதால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கவலையில் இருக்கிறார்கள்.
அதிமுக தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 22-ம் தேதி இரவு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை வரை ஓபிஎஸ் தரப்பு சட்டப் போராட்டத்தை நடத்தியது. இதன் பலனாக ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் பெற்றது ஓபிஎஸ் தரப்பு.
இதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தனர்.இதற்கு, பொதுக்குழு உறுப்பினர்களும் பலத்த கூச்சலிட்டு ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ், வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் பாதியில் வெளியேற கூட்டத்தில் மேலும் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு.. SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!
இபிஎஸ் Vs ஓபிஎஸ்
அதுமட்டுமின்றி வரும் 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடக்க உள்ளதால் இன்னும் என்னென்ன சம்பவங்கள் நடக்குமோ என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்தரப்பு கோஷ்டியின் போஸ்டர்களை கிழித்தும், போராட்டங்களை செய்தும் வருகிறார்கள். வரப்போகின்ற உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் முடங்கி போயிருப்பதால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கவலையில் இருக்கிறார்கள்.
புதுச்சேரி அதிமுக
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன். அப்போது அவர், ’ஓபிஎஸ்ஸின் பினாமியாக புதுச்சேரி அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் செயல்படுகிறார்.பன்னீர்செல்வத்தின் பினாமியாக உள்ள ஓம் சக்தி சேகர் அரியூர் பகுதியில் 30 கோடி ரூபாயில் சொத்து வாங்கி இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு.. மக்கள் உங்களுடன் நிற்பார்கள், கவலைப்படாதீங்க - நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு !
ஓபிஎஸ்
தமிழகத்தில் ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தை புதுச்சேரியில் முதலீடு செய்து உள்ளார். ஒற்றைத் தலைமையை பெற பச்சோந்தி தனமாக செயல்பட்டு குள்ளநரி வேஷம் போட்டு ஒட்டுமொத்த சூழ்ச்சியோடு ஓபிஎஸ் வலம் வருகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் துரோகிகள் தான்’ என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் செய்திகளுக்கு.. 750 கோடி முறைகேடு.. சிக்குவாரா செல்லூர் ராஜூ ?அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்