கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வக்கம்பட்டியில் கூட்டுறவு கல்லூரியை இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலேயே முதன் முறையாக ஆத்தூரில் கூட்டுறவுத்துறைக்கென கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.. டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !
தமிழக அரசு
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு கல்லூரி மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதே போல் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மேலும் செய்திகளுக்கு.. SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!
750 கோடி மோசடி
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி சொத்துக்களாவது பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும்.
கூட்டுறவு துறை
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. மக்கள் உங்களுடன் நிற்பார்கள், கவலைப்படாதீங்க - நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு !