வட்டார வளர்ச்சி அதிகாரியை சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர்.?? இதுதான் திராவிடம் மாடலா.?

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2022, 12:31 PM IST
Highlights


திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு  மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதை மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப் பெயர் சொல்லி இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றம்சாட்டியுள்ளார். நீ ஒரு SC BDO தானே என்று பலமுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை இழிவு படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு எதிராக வட்டார வளர்ச்சி அலுவலரின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு  மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதை மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப் பெயர் சொல்லி இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற கலைஞர் ஒருங்கிணைத்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் தொடர்பான கருத்தரங்கை தொடங்கி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விவசாயிகளுக்கு 2 கோடி மதிப்பிலான இடுபொருட்களை வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர் வரவேற்க சென்ற தன்னை சாதிப் பெயர் சொல்லி அமைச்சர் இழிவு படுத்தியதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிடிஒ ராஜேந்திரன், அமைச்சர் ராஜகண்ணப்பன்  சிவகங்கையில் உள்ள வீட்டுக்கு வரச்சொல்லியதாக தகவல் வந்தது. அதைகேட்டு தானும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பு கண்ணன் என்பவரும் சென்று இருந்தோம். அமைச்சரின் வீட்டிற்கு உள்ளே நுழைந்தவுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் " நீ SC BDO தானே,  நீ அதிமுக கவுன்சிலர் பேச்சைதான் கேட்ப, நாங்கள் சொல்வது எல்லாம் நீ கேட்க மாட்டா, உன்னை உடனே AD கிட்ட சொல்லி தூக்கி அடிக்கிறேன் பாரு, என ஒருமையில் மிரட்டினார். சுமார் 6 முறை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிடிஓ என என்னை கூறினார். வட மாவட்டங்களுக்கு உன்னை மாற்றி விடுவேன் என மிரட்டினார்.

இதானல் நேற்று இரவு முழுவதும் அதனால் நான் தூங்கவில்லை, நடந்ததை யாரிடமும் சொல்வது என தெரியவில்லை. அமைச்சர் வீட்டில் நடந்த அனைத்தையும் நான் உடன் எடுத்துச் சென்ற டைரியில் எழுதி வைத்துள்ளேன் என கலங்குகிறார்.. மேலும் சம்பவம் குறித்து தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் புகார் அளிக்க முகவரி கோட்டு  அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ராஜேந்திரன் கூறினார். அவர்கள் பேக்ஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் நான் அழக்கூடிய  நிலைக்கு சென்று விட்டேன். மேலும் அவர் இவனை மாற்ற வேண்டும் அதற்கான  ரிப்போர்ட் கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினார். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாருக்கும் துரோகம் செய்யவில்லை, இதுவரை எந்த அரசியல் கட்சியினரையும் அதிகாரிகளிடம் நான் மனக்காயப்படும்படி பேசியதில்லை. 

அமைச்சருக்கு ஏன் என் மீது இவ்வளவு ஆவேசம் என்று தெரியவில்லை, என்னை நீ வா போ என்று ஒருமையில் பேசினார், ஆனால் அவர் என் தகப்பன் ஸ்தானத்தில் இருப்பதால் நான் அதை பொருட்படுத்தவில்லை, அவரை நான் குறை சொல்லவில்லை கூட்டியும் சொல்லவில்லை, 57 வயதில் நான் இதுவரை சந்திக்காத மன காயத்தை சந்தித்து விட்டேன். இதனால் முதுகளத்தூர் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிரு க்கிறேன் என அவர் கூறினார். அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திராவிட மாடல், சமூக நீதி அரசியல் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒரு அதிகாரியை இப்படி இழிவு படுத்தி பேசலாமா? என பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர். 
 

click me!