சசிகலா சுதந்திர பறவை.. எங்கு வேண்டுமானாலும் சுற்றுப் பயணம் செய்யலாம்.. சின்னம்மாவை நக்கலடித்த ஜெயக்குமார்.

Published : Mar 29, 2022, 11:22 AM IST
சசிகலா சுதந்திர பறவை.. எங்கு வேண்டுமானாலும் சுற்றுப் பயணம் செய்யலாம்.. சின்னம்மாவை நக்கலடித்த ஜெயக்குமார்.

சுருக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஒட்டுமொத்த அதிமுகவையும்  எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதே நேரத்தில் சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிது காலம் மொனமாக இருந்து வந்தார். 

சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  இது ஒரு சுதந்திர நாடு என்றும் அவர் free bird ஆக எங்கு வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஒட்டுமொத்த அதிமுகவையும்  எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதே நேரத்தில் சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறிது காலம் மொனமாக இருந்து வந்தார். தற்போது மீண்டும் கட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இதுவரை அவரின் நடவடிக்கைகளால் பெரிய அளவில் தாக்கம் இல்லை. மறுபுறம்  அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதால் செய்வதறியாது திகைத்து வரும் ஓ. பன்னீர்செல்வம், அடிக்கடி சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார். இது கட்சிக்குள் அவ்வப்போது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில்  சசிகலா விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

ஜனநாயக ரீதியில் பேசத்தெரியாத, விடியாத திமுக அரசு பொய்  வழக்குகள் மேல் பொய் வழக்கு போட்டு வருகிறது. ஆனால் அதிமுக என்றும் சிறைக்கு அஞ்சாத இயக்கம், தங்களை விமர்சிப்பவர்கள் மீது பொய் வழக்குப் போட்டால் விமர்சிக்க மாட்டார்கள் என திமுக தப்புக் கணக்கு போடுகிறது.

எனது இயக்க பணியை, கழக இயக்க பணியை முடக்க வேண்டும் என திமுக தொடர்ந்து என் மீது பொய் வழக்குப் போட்டு வருகிறது. எனது கையெழுத்து இந்த அரசுக்கு தேவைப்படுகிறது,  திமுக தலைவர் ஸ்டாலின் டேரா பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இன்ப சுற்றுலா குறித்து யாரும் வாய் திறக்கவில்லை என்றும், ஆறு மாதம் நடந்த கண்காட்சி முடியப்போகும் நேரத்தில் அங்கு ஸ்டால் திறப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தலுக்கு முன்பாக முதல்வரை நேரில் சந்திக்கலாம் என ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்ட அவர், எத்தனை பேர் அப்படி சந்தித்துள்ளனர் என்றும், மனுக்கள் ஒவ்வொன்றையும் பெட்டியிலிருந்து முதல்வரே திறப்பேன் என கூறியிருந்த நிலையில், மற்ற பெட்டிகளை தான் அவர் திறந்து வருகிறார் எனவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும், எதிர்க்கட்சிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என திமுக நினைப்பதாக கூறினார். அரசு ஊழியர்கள் நம்பி வாக்களித்த மோசம் போயுள்ளனர். நிதி நெருக்கடி சூழலில் இருந்தும் அதிமுக ஆட்சியில் எந்த கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அவர் கூறினார். ஆனால் திமுக இப்போது அனைத்தின் விலையையும் உயர்த்தப் போகிறது என்றார். தமிழகத்தில் சசிகலாவின் சுற்றுப் பயணத்தால் எந்த தாக்கமும் இருக்காது எனக் கூறிய அவர். இது சுதந்திர நாடு அவர் சுதந்திர பறவையாக எங்கு வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செல்லலாம் என விமர்சித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!