வரைவு திட்டத்தை அமைச்சர் வரவேற்றது கண்டிக்கத்தக்கது : பி.ஆர்.பாண்டியன்

First Published May 14, 2018, 1:21 PM IST
Highlights
The Minister welcomed the draft proposal and condemned - PR Pandian


காவிரி நதிநீர் பிரச்சனையில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார்.

இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி, வாரியமா?, குழுவா?, ஆணையமா?
என பெயர் வைப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை. அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும், தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும்.

தமிழகத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும். 177.25 டி.எம்.சி. நீர் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். வரைவு திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, தமிழக அரசின் கருத்தை 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். வரைவு திட்டம் தாக்க்ல செய்த மத்திய அரசு அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போது நன்றி தெரிவித்தார்.

இது குறித்து பி.ஆர்.பாண்டியன், காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை அமைச்சர் வரவேற்றது கண்டிக்கத்தக்கது என்றார்.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியே வரைவு திட்டம் அமைய வேண்டும் என்றும் மாற்றி அமைத்தால் தமிழகத்தின் உரிமை பரிபோகும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து தமிழகத்திற்கே எதிரானது என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

click me!