
தினகரன் மற்றும் திவாகரன் இருவர் இடையில் வெடித்துள்ள போருக்கு சூத்ரதாரியே வெற்றிவேல்தான்! என்று பேசப்படுகிறது. இவரின் செயல் மற்றும் நடவடிக்கைகளால் வெகுண்டே திவாகரன் சண்டையை துவக்கினார்.
இந்நிலையில் தன் தலை இப்படி உருட்டப்படுவது குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் வெற்றிவேல், பொளேர் வார்த்தைகளில் போட்டுத் தாக்கியுள்ளார் இப்படி...”திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் முகநூலில் ‘இந்த அமைப்பு சமைக்கப்படும்’ என்று எழுதியுள்ளார். எங்கள் அமைப்பை சமைக்க இவர் யார்? வயசு, தராதரமெல்லாம் வேண்டாமா? சின்னம்மா மீதான களங்கத்தை ஒரே வருடத்தில் துடைத்தெறிந்திருக்கிறோம்.
அப்பல்லோவில் அம்மா சேர்க்கப்படும்போதே அவருக்கு உயிரில்லை! என்று கதைகட்டி விட்டவர்களின் வாயை சிறிய வீடியோ மூலம் அடைத்திருக்கிறோம். இப்படி சின்னம்மாவை கண்களில் வைத்து தாங்கிக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் திவாகரனோ சின்னம்மாவுக்கும், தினகரனுக்கும் முடிந்த மட்டுக்கும் அவப்பெயரை கொண்டு வர முயற்சித்து முயற்சித்து தோற்கிறார். ஆனாலும் அடங்கமாட்டேங்கிறார்.
மன்னார்குடியில் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாததுக்கு ஒரே காரணம் திவாகரன் தான். இவரோட முகத்தை நினைச்சாலே ஒருத்தனும் ஓட்டுப்போட மாட்டான். இரட்டை இலை சின்னத்தை வெச்சு, தான் வசிக்கும் வார்டு தேர்தல்ல கூட கட்சிய ஜெயிக்க வைக்க முடியாத இவரெல்லாம் என்னைப் பத்தி பேசுறதுக்கு அருகதையே கிடையாது. சிம்பிளா சொல்றதுன்னா திவாகரன் ஒரு மன்னார்குடி மனநோயாளிதான்.
அவரும் அவர் மகனும் சேர்ந்து கொண்டுதான் குழப்பத்தை விளைவிக்கிறார்கள். ஆனாலும் தன் மகன் சொல்வதற்கு கூட முரணான தகவலை பதிவு செய்கிறார் திவாகரன். இவரை மன நோயாளி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?” என்றிருக்கிறார்.
ஹும் இது எங்கே போய் முடியுமோ!?