ஜெயலலிதா இறந்தவுடன் டி.டி.வி.தினகரன் எதற்காக துடிச்சாரு தெரியுமா ? அல்லு தெறிக்கவிடும் திவாகரன்….

 
Published : Apr 28, 2018, 08:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
ஜெயலலிதா இறந்தவுடன் டி.டி.வி.தினகரன் எதற்காக துடிச்சாரு தெரியுமா ? அல்லு தெறிக்கவிடும் திவாகரன்….

சுருக்கம்

ttv dinakaran try to become CM of tamil nadu at the time of Jaya death

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்தவுடன் தன்னை முதலமைச்சராக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் துடித்தாகவும், இதற்காக சசிகலாவுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தாகவும் தெரிவித்த திவாகரன், நாங்கள் எல்லாம் தடுத்ததால்தான் ஓபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

டிடிவி.தினகரன் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இடையே தற்போது மோதல் முற்றி வருகிறது. ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். திவாகரனின் மகன் ஜெய ஆனந்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பு தர வேண்டும் என கேட்டதாகவும் அதற்கு டி.டி.வி.தினகரன் மறுத்ததால், தற்போது எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் திவாரன் மீது தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் தினகரன் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் அரசியல் ஆசை இருந்தததில் என திவாகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த திவாகரன், ஜெயலலிதா மறைந்த அன்று அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தவைகள் குறித்து விளக்கமளித்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் உடனடியாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க வேண்டிய சட்டச் சிக்கல் எழுந்தது. அப்போது தன்னை முதலமைச்சராக்கும்படி டி.டி.வி.தினகரன், சசிகலாவிடம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். கிட்டத் தட்ட சசிகலாவும் அந்த மனநிலையிக்கு வந்துவிட்டார்.

ஆனால் அங்கு போய் சேர்ந்த நானும் மற்றவர்களும், தினகரனை முதலமைச்சராக்கினால்  கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று தடுத்தோம் என தெரிவித்தார். ஆனாலும் சசிகலாவிடம் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அடம் பிடித்தாக குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!