அதிமுகவில் இன்னும் மிகப்பெரிய அளவில் பிளவு ஏற்படும் - ஜி.கே.மணி; நடக்குறத பார்த்தால் அப்படிதான் தெரியுதாம்...

 
Published : Apr 28, 2018, 07:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
அதிமுகவில் இன்னும் மிகப்பெரிய அளவில் பிளவு ஏற்படும் - ஜி.கே.மணி; நடக்குறத பார்த்தால் அப்படிதான் தெரியுதாம்...

சுருக்கம்

There will be a bigger split in the admk- GK Mani

திண்டுக்கல்

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 4, 5 பிரிவாகிவிட்ட நிலையில் தற்போது திவாகரன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசுகிறார். தேர்தல் நேரத்தில் இன்னும் மிகப்பெரிய அளவில் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றார் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி.

பா.ம.க.வின் மூத்த தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலம் பெற வேண்டி பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள், பழனி மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு நடத்துவதற்காக பழனிக்கு நேற்று வந்தனர். 

அப்போது அவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "பல்கலைக்கழகங்களில் ஊழல்கள், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. இது வேதனைப்பட வேண்டிய விஷயம் ஆகும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், கண்மாய்கள், குளங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 

கடந்த 1½ ஆண்டுக்கு மேல் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில அரசு காலம் கடத்தி வருகிறது. இதனால் மத்திய நிதி ஆணையம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1800 கோடி நிதி கிடைக்கப்போவதில்லை. இது உள்ளாட்சிகளுக்கான வளர்ச்சி பணிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். 

அதேபோல் தற்போது நடக்கும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலிலும் சொல்லி மாளாத அளவுக்கு முறைகேடு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை நிராகரிப்பது. இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் இறுதி செய்து பட்டியல் வெளியிடுவது, தேர்தல் நடத்தாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிப்பது உள்ளிட்ட மோசடிகள் தற்போது நடக்கிறது. இது ஜனநாயக படுகொலை ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்ற ஜனநாயகத்தை சபாநாயகர் தனபால் படுகொலை செய்து வருகிறார். சட்டமன்றத்தின் மரபை மீறி அவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க. 4, 5 பிரிவாக செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தற்போது திவாகரன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசுவது. தேர்தல் சமயத்தில் இன்னும் மிகப்பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும்.

மத்திய அரசு தான் மாநில அரசை இயக்குகிறது என்பது ஊர் அறிந்த விஷயம்" என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மேற்கு மாவட்ட தலைவர் வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்