காவிரி பிரச்சனையில் 2 பேரும் சேர்ந்து நாடகமா ஆடுறீங்க !! காங்கிரஸ், பாஜகவை வறுத்தெடுத்த சந்திரசேகர ராவ் !!

 
Published : Apr 28, 2018, 07:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
காவிரி பிரச்சனையில் 2 பேரும் சேர்ந்து நாடகமா ஆடுறீங்க !! காங்கிரஸ், பாஜகவை வறுத்தெடுத்த சந்திரசேகர ராவ் !!

சுருக்கம்

drama by congress and BJp in cauvery issue

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகம் – கர்நாடகம் இடையே சமரசம் செய்து வைப்பதை விட்டுவிட்டு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகள் நாடகம் ஆடுவதாக தெலங்கான கட்சித் தலைவரும்,முதலமைச்சருமான சந்திசேகர ராவ் குற்றம்சாட்டினார்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே காவிரி விவகாரத்தில் கால அவகாசம் போதவில்லை மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால் உடனடியாக அந்த மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பா.ஜனதா காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? என கேள்வியை எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா நாடகம் நடத்துகிறது. இப்போது காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? மத்திய அரசுகளின் திறமையற்ற செயல்பாடு காரணமாகவே தண்ணீருக்கான போர் நடந்து வருவதாக சந்திர சேகர ராவ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!