நீடிக்கிறது இடைக்கால தடை - வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்...

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
நீடிக்கிறது இடைக்கால தடை - வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்...

சுருக்கம்

The Madras High Court has ordered the adjournment of the 18 cases of DDV Dinakarans MLAs to the case on Oct 9.

டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த வழக்கை  அக்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகர் தனபால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார். 

இதுகுறித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் ஆனால் அடுத்த தீர்ப்பு வரும் வரை அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இதனிடையே எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் 18 பேரின் பெயர்கள் அரசு இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் தரப்பு மனு முதலில் விசாரிக்கப்பட்டது. 

அப்போது, அதிமுகவினர் யாரும் 18 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக குற்றம் சாட்டவில்லை என டிடிவி தரப்பு வாதிட்டனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த வழக்கை அக்.9 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி