டெண்டர் முறைகேடு வழக்கு.. ஆர்.எஸ். பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்.. குஷியில் இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jul 18, 2023, 11:28 AM IST
Highlights

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

இபிஎஸ் மீது டெண்டர் முறைகேடு

அதிமுக ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது ரூ.713.34 கோடியாக உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல பல நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டதாக திமுக சார்பாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி,

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

கடந்த 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது சிபிஐ விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணை நடந்தது. இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது.  எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட புகாரில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி செய்த நீதிபதி

இந்தநிலையில் வழக்கு விசாரணை பல கட்டங்களை அடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பில், டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2018ஆம் ஆண்டுவிசாரணை செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.இதன் மீது மேல் முறையீடு தேவையில்லையென்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மட்டுமே மாறியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அரசியல் சூழ்நிலையும் மாறப்பட்டுள்ளது. அதனால் இதன் மீது மேல் நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லையென கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.  

இதையும் படியுங்கள்

புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார்.? முதல் நாள் உணவு என்ன வழங்கப்பட்டது.? வெளியான தகவல்

 

click me!