
ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும், ஆட்சிக்கு வர திமுகவுக்கு எவ்வித தகுதியும் இல்லை எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் அதிமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள்.
அதன்படி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது.
அப்போது, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ. 23.95 கோடி மதிப்புள்ள 159 புது திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து விழாவில் மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும், ஆட்சிக்கு வர திமுகவுக்கு எவ்வித தகுதியும் இல்லை எனவும் தெரிவித்தார்.