நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க அந்த கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தனது அணிக்கு இழுத்துள்ளது. இந்தநிலையில் அந்த 14 பேர் கொண்ட பட்டியலில் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் களத்தில் கடந்த 5 வருடமாக கூட்டணியாக இருந்த அதிமுக- பாஜக பிரிந்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இருந்த போதும் பாமக மற்றும் தேமுதிக பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதால் கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேரை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. இதனிடையே அந்த 14 பேர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இணையும் அதிமுக மாஜி எம்எல்ஏக்கள்
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அதிமுக மாஜி எம்எல்ஏக்களான 1. திரு.கு.வடிவேல் - கரூர், 2. திரு.P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி,3. திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான், 4. திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர், 5. திரு R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர், 6. திரு.M.V.ரத்தினம் - பொள்ளாச்சி, 7. திரு S.M.வாசன் - வேடச்சந்தூர், 8. திரு.S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி,
9. திரு.P.S. அருள் - புவனகிரி, 10. திரு.N.R.ராஜேந்திரன், 11. திரு. R.தங்கராசு - ஆண்டிமடம், 12. திரு.குருநாதன், 13. திரு V.R. ஜெயராமன் - தேனி, 14. திரு.பாலசுப்ரமணியன் - சீர்காழி, 15. திரு.சந்திரசேகர் - சோழவந்தான் ஆகியோர் இணைய இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் திமுக, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இணைக்கும் பணி தொடங்கியுள்ளதாக பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்