
டெல்லியில் ஹவாலா ஏஜென்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்ததாக வழக்கறிஞர் கோபிநாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணையில், சுகேஷிடம் பேசியதை டிடிவி ஒப்புக்கொண்டார்.
பின்னர், டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் தினகரன்னு ஆஜர் படுத்தபட்டார்.
தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு மே 15 வரையும், சுகேசுக்கு மே 12 வரையும் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஹவாலா ஏஜென்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்ததாக சென்னை திருவேற்காடை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பணம் பெற்றதும் தனது போனில் இருந்து சென்னை நபருடன் சுகேஷ் பேசியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முக்கிய சாட்சியம் கிடைத்துள்ளதால் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சாட்சியங்களை டிடிவி தினகரன் அழித்துவிட வாய்ப்பு உள்ளதால் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.