அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி.

Published : Jun 07, 2021, 11:22 AM ISTUpdated : Jun 07, 2021, 02:12 PM IST
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி.

சுருக்கம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டேடுக்கும் பணி இன்று சாலிகிராமதில் நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "சாலிகிராமத்தில் கருணாநிதி தெருவில் 250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனம் நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளனர். 

தற்போது அது மீட்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து உள்ளோம், அதற்குள் அவர்கள் அந்த வாகனத்தை எடுத்து கொள்ள வேண்டும், தற்போது மீட்டநிலம்  வடபழனி திருக்கோவிலுக்கு வழக்கபட்டது, இங்கு வாகன நிறுத்துவதற்கு யாரும் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை அவர்கள் கூறுவது உண்மை இல்லை என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் டிரைலர்  தான் மேயின் பிச்சரை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள் என்றார்.  மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும். அதை முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலன் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும், கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும். பிஜேபி நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக எதோ பேசி இருப்பார்கள். நல்லது என்றால் அதை ஏற்று கொள்வோம் இல்லை என்றால் அதை ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள மாட்டோம். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற அவர், கடந்த காலங்களில் நடந்த தவறுகளை கிளறினால் நாட்கள் போதாது  நேரமும் போதாது அத்தனை ஊழல் முறைகேடு மோசடி நடந்திருக்கிறது. தற்போது விமர்சனங்களை புறம்தள்ளி மக்கள் சேவையில் கவனத்தை செலுத்துகிறோம் என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!