சித்தராமையா தான் 5 ஆண்டுகளுக்கும் முதல்வர் என்று கூறிய அமைச்சர்.. டி.கே.சிவகுமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

By Ramya s  |  First Published May 23, 2023, 7:43 PM IST

கர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு இல்லை என்று கூறிய காங்கிரஸ் தலைவர் எம்பி பாட்டீலின் கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் இன்று பதிலளித்துள்ளார்


கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய குழப்பம் நீடித்து வந்தது. சித்தராமையா - டி.கே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பின்னர் சித்தராமையா முதல்வராக இருப்பார் என்றும், டி.கே சிவகுமார் துணை முதல்வராக இருப்பார் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதன்படி கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க : உயர்ந்த உள்ளம் கொண்டவர்! மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கருமுத்து கண்ணன் மறைவு! ஸ்டாலின் இரங்கல்!

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே கர்நாடக முதல்வரின் பெயரை முடிவு செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது, ​​அதிகாரப் பகிர்வு ஃபார்முலா குறித்து அதிகம் ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பதவியை சித்தராமையா மற்றும் சிவகுமார் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த ஆலோசனையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே சிவகுமார் நீடிப்பது கருத்தில் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு டி.கே.சிவகுமார் ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. எனினும் முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் சிவகுமார் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இடையே அதிகார பகிர்வு ஃபார்முலா இல்லை என்று காங்கிரஸ் தலைவர் எம்பி பாட்டீல் தெரிவித்தார். கடந்த வாரம் கர்நாடக அமைச்சரவை அமைச்சராக பதவியேற்ற எம்பி பாட்டீல், சித்தராமையா – டி.கே சிவகுமார் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இல்லை என்று மறுத்தார். அவர்களுக்கிடையே அதிகாரப் பகிர்வு பார்முலா இருந்தால், காங்கிரஸ் உயர்மட்டக் குழு அறிவித்திருக்கும். ஐந்தாண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாட்டீலின் கருத்துக்கு சிவகுமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் " அவர்கள் விரும்புவதை சொல்லட்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைவர் இருக்கிறார், முதல்வர் இருக்கிறார், பின்னர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் இருக்கிறார். அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்" என்று சிவக்குமார் கூறினார்.

முன்னதாக காங்கிரசுக்குள் நிலவும் அரசியல் பூசல் குறித்து பேசிய, டி.கே.சிவகுமார், "இப்போது எங்கள் கவனம் ஆட்சி மற்றும் மக்கள் மீது மட்டுமே உள்ளது." என்று கூறியிருந்தார்.

மே 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 224 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியது. பிஜேபி 66 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் கிங் மேக்கராக இருக்கக்கூடும் என்று கருதப்பட்ட ஜேடிஎஸ் வெறும் 19 இடங்களை மட்டுமே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆடியோ டேப் லீக் ஆனவுடன் லண்டனுக்கு பறந்த உதயநிதி,சபரீசன்.!இப்போ முதலீடு செய்யப்போகிறாரா ஸ்டாலின்-இபிஎஸ் கேள்வி

click me!