மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் திடீர் மாற்றம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published May 23, 2023, 5:09 PM IST
Highlights

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்ட காரணத்தால் அந்த பொறுப்பிற்கு அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர். காந்தி  திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு அர, சக்கரபாணி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். 

மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது மட்டுமே திமுகவின் குறிக்கோள்! இறங்கி அடிக்கும் அண்ணாமலை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு எஸ். ரகுபதி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட மாண்புமிகு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள்

இதே போல சேலத்திற்கு கேஎன் நேரு, தேனிக்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு எ.வ வேலு, தருமபுரிக்கு எம்ஏர்கே.பன்னீர் செல்வம், தென்காசிக்கு கேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், ராமநாதபுரம் தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் தா.மோ அன்பரசன், திருநெல்வேலி ராஜ கண்ணப்பன், கோவைக்கு செந்தில் பாலாஜி, பெரம்பலூர் சிவசங்கர், தஞ்சாவூர் அன்பில் மகேஷ்,  உள்ளிட்ட அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இதையும் படியுங்கள்

ஆடியோ டேப் லீக் ஆனவுடன் லண்டனுக்கு பறந்த உதயநிதி,சபரீசன்.!இப்போ முதலீடு செய்யப்போகிறாரா ஸ்டாலின்-இபிஎஸ் கேள்வி

click me!