பள்ளிவாசலுக்கு பாஜக நிர்வாகி கொடுத்த பரிசுப்பொருள்...! வீதியில் தூக்கி எறிந்த இஸ்லாமியர்கள்.

By Ajmal KhanFirst Published Apr 10, 2022, 3:47 PM IST
Highlights

பாஜக நிர்வாகி  பள்ளிவாசலுக்கு குளிர்சாதன பெட்டியை வாங்கி கொடுத்த நிலையில் அதனை வாங்க மறுத்த அந்த பகுதியை சேர்ந்த  இஸ்லாமியர்கள் அந்த  குளிர்சாதன பெட்டியை வீதியில் தூக்கியெறிந்துள்ளனர்.
 

ஹிஜாப் அணிய தடை

கர்நாடகாவில் இஸ்லாமிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், ஹிஜாப் அணிய கூடாது, மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது மேலும் இந்துக்கள் யாரும் ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை உண்ண வேண்டாமென சில அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  இஸ்லாமிய மற்றும் பாஜகவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் பாஜக சிறுபான்மை அணி தலைவராக இருப்பவர் முஹம்மத் அன்வர், இவர் தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார். 

Latest Videos

குளிர்சாதனத்தை தூக்கியெறிந்த மக்கள்

குறிப்பாக முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவற்றை ஆதரித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக தான் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்ததாகவும் பேசி வந்துள்ளார். இதன் காரணமாக விகாராபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் முஹம்மது அன்வர் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.இந்தநிலையில் கோடை காலத்தில் ரம்ஜான் நோன்பு இருந்து வரும் இஸ்லாமியர்களுக்காக அந்த பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்கு வெப்பத்தை தவிர்க்க குளிர்சாதனங்களை நன்கொடையாக முகம்மது அன்வர் வாங்கி கொடுத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் அந்த குளிர்சாதனங்களை  பாஜக நிர்வாகி  முகம்மது அன்வர் வீட்டின் முன் தூக்கி எரிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து முகம்மது அன்வர் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!