அதிமுக பொதுச் செயலாளர் யார்..? சசிகலாவுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு.. தினகரன் பரபரப்பு பேட்டி..

Published : Apr 10, 2022, 03:26 PM IST
அதிமுக பொதுச் செயலாளர் யார்..? சசிகலாவுக்கு எதிரான வழக்கில் நாளை  தீர்ப்பு.. தினகரன் பரபரப்பு பேட்டி..

சுருக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.  

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து, முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். மேலும் சசிகலாவின் பரிந்துரையின் பேரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், சிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடந்தார். அவரது மனுவில், 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது எனவும் பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி என்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்,  எடப்பாடி பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்தனர். இறுதியாக இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் நேற்று முந்தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தத். ஆனால் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி ஸ்ரீதேவி தவிர்க்க இயலாத காரணத்தால் விடுமுறை என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகர,அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. அது நல்ல தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பழைய ஆட்சியாளர்களை குறை கூறிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!