செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சிக்கியது எப்படி.? காட்டி கொடுத்தது எது.? வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Jun 15, 2023, 7:56 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் கணக்கில் வராத 1.34கோடி ரூபாய் பணம் தொடர்பாக வருமான வரி தாக்கலில் இடம்பெறாததை கண்டறிந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
 


கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சி காலமாக 2011 முதல் 2015ஆம் ஆண்டு காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் நேற்று அதிகாலை கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரை  மருத்துவமனையில் வந்து பார்த்த நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

வெளியான ரிமாண்ட்  நகல்

அதேநேரத்தில், செந்தில்பாலாஜி தரப்பின்  ஜாமீன் மீதான மனு, அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுக்களின் மீதுஇன்று  தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்  செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை சமர்பித்த ரிமாண்ட் நகல் வெளியாகியுள்ளது. அதில் கைது செய்வதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் 2015 ஆம் ஆண்டு காலத்தில் செந்தில்பாலாஜி வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் வருமான வரி தாக்கலில் இடம்பெறாத ரூ.1.34 கோடி இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவியின் வங்கி கணக்கிலும் 29 லட்சம் ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும்.  

வங்கி கணக்கில் பணம் வந்தது எப்படி.?

மேலும் செந்தில் பாலாஜி உதவியாளர் சண்முகத்திடம் விசாரணை நடத்த பலமுறை சம்மன் அனுப்பிய நிலையில் சம்மனை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து வாய்தா பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மோசடி விவகாரத்தில் ஏதோ மறைக்க பார்ப்பது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற பணத்தை அமைச்சரிடம் நேரடியாகவும், உதவியாளரிடமும் பணம் கொடுத்ததாக  அமலாக்கத்துறை சமர்பித்த ரிமாண்ட் நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

click me!