அமைச்சர் செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் அமைச்சர் சிவசங்கர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, “ நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியாக 11வது நிலையில் இருந்து 5வது பெரிய நாடாக விளங்குகிறது. பருப்பு உற்பத்தியில் இந்தியா முதல் நாடாக மாறி இருக்கிறது. 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று பேசிய அவர், திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்து மாட்டப்போகும் அமைச்சர் யார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூனியராக யார் இருப்பார் என நான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். குட்டி செந்தில் பாலாஜி யார் என்றால் இந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தான். அரியலூர் மாவட்டத்தின் திமுக செயலாளர்.
அமைச்சர் சிவசங்கர் 36 பேரின் பணி மாறுதலுக்கு ரூ.12 கோடி வாங்கியுள்ளார். சிவசங்கர் என் மீது ஒரு வழக்கை எடுத்து வருவார். மான நஷ்ட வழக்கு போடுவார்கள். அதை மானம் இருப்பவர்கள் போடலாம், நீங்க எதுக்கு போடுறீங்க? நீங்கள் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.Cash for Job Scamஐ தொடர்ந்து Cash for Transfer Scam என்று செல்கிறது.
செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் சிவசங்கர். அவருடைய ஏஜெண்ட், லஞ்ச ஒழிப்புத்துறையால் தேடப்படும் குற்றவாளி. சிவசங்கர் வீட்டுக்குச் சென்றால் அவரது பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு
பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்