அமமுகவுக்கு ஏற்பட்ட கதி... நொந்துபோய்க்கிடக்கும் டி.டி.வி.தினகரன்..!

Published : Jan 23, 2022, 03:33 PM IST
அமமுகவுக்கு ஏற்பட்ட கதி... நொந்துபோய்க்கிடக்கும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

 சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகராட்சிக்கு 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டணி குறித்தும், மேயர் வேட்பாளர் குறித்தும், யூகிக்க துவங்கி வேட்பாளைரை முடிவு செய்து வருகிறார்கள். ஆனால், திருச்சி மாவட்டத்தில் அமமுகவில் மட்டும் மேயர் வேட்பாளர் என கூறினாலே அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.

 இக்கட்சியில் உள்ள மகளிர் அணியை சேர்ந்த சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகராட்சிக்கு 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.பி தேர்தலில் கூட நின்று டெபாசிட் இழந்தார். பல கட்சியும் மாறியதால் இருந்த செல்வாக்கும் பறிபோனது

.

தேர்தலில் நின்றதால் கடனாளி ஆனதாகவும் கட்சி நிர்வாகிகளிடம் கூறி புலம்பி வருகிறார். தற்போது அமமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவித்தால் செலவு செய்ய பணம் இல்லை. கட்சி நிதி வழங்கினால் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என சாருபாலா தொண்டைமான் கூறி வருவதாக கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள். திருச்சி மேயர் பதவி பொது பிரிவு என்பதால் கட்சியில் உள்ள முன்னாள் கொறடா தனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என சகாக்களிடம் கூறி விட்டார். 

இந்த இரண்டு முக்கிய பிரமுகர்கள் தவிர வேறு யாரும் கட்சியில் இல்லாததால் திருச்சியில் மாநகரில் அமமுக கட்சிக்கு வேட்பாளர் தேடும் நிலை இருந்து வருவதாக கட்சிக்குள்ளும், அதிமுகவினரும் பேசிக்கொள்கிறார்கள். அங்கு மட்டுமல்ல. பல்வேறு ஊர்களிலும் அமமுகவுக்கு இது தான் நிலைமை. இதனால் நொந்துபோய்க் கிடக்கிறாராம் டி.டி.வி.தினரகரன். அமமுகவுக்கு மட்டும் இந்த நிலையில்லை. விஜயகாந்த்தின் தேமுதிகவிலும் பணம் கொடுத்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவோம். இல்லைஎன்றால் எங்களை விட்டு விடுங்கள் என அக்கட்சி நிர்வாக்கிகள் ஜெர்க்காகி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..