ஸ்டாலின் என பெயர் வைத்தது எப்படி? திருமண விழாவில் முதல்வர் சொன்ன சுவாரஸ்ய கதை..!

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 12:34 PM IST
Highlights

அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால் அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக தான் இருந்தது. அய்யா என்றால் தந்தை பெயரியார், துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய அண்ணாதுரை. அந்த துரையை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். 

எனக்கு அய்யாதுரை என பெயர் வைப்பதாக இருந்தது. அப்போது, ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் உயிரிழந்த நிலையில் அவரது பெயரை எனக்கு சூட்டினர் என பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனையடுத்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்;- எங்களுடைய குடும்பத்தில் அண்ணணாக இருந்தாலும், தங்கைகலாக இருந்தாலும் எல்லா பெயர்களும் தமிழ் பெயர்கள் தான். என்னுடைய பெயர் மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம். அது ஒரு காரண பெயர். கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது தலைவர் கருணாநிதிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில் நான்  பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக ஸ்டாலின் என்ற பெயரை சூட்டினார். 

அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால் அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக தான் இருந்தது. அய்யா என்றால் தந்தை பெயரியார், துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய அண்ணாதுரை. அந்த துரையை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். 

ஆனால்,  ரஷ்யாவில் இருக்கக்கூடிய ஜோசப் ஸ்டாலின் இறந்தவுடன் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்துக்கொண்டிருந்த போது அப்போது ஒரு துண்டு சீட்டை கலைஞரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளனர். அந்த துண்டு சீட்டில் என்ன எழுதபட்டிருக்கு என்று சொன்னால் உங்களுக்கு ஒரு பையன் பிறந்துள்ளான். அதை படித்து பார்த்த தலைவர்கள் அவர்கள் அங்கேயே பெயர் சூட்டினார். எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் அந்த மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன் என்று கூறினார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கேள்வி பதிலாக இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு அமைந்துள்ளது. மேலும், இந்தியாவில் நெம்பர் 1 முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்று பீட்டர் அல்போன்ஸ் பெருமையுடன் கூறினார். என்னை பொறுத்த வரையில் நெம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட நெம்பர் ஒன் தமிழ்நாடு தான் என்று சொல்லக்கூடிய நிலைமை வரவேண்டும். அதற்காக தான் நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம், பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நீங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

click me!