ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா..? என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்..?

Published : Jan 23, 2022, 12:51 PM IST
ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா..? என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்..?

சுருக்கம்

சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126வது பிறந்த நாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த, அவரது திருவுருவ படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்திய மக்களால் போற்றப்பட்ட மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரது படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நிலையைப் பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும், கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது" என தெரிவித்துள்ளார்.

சென்னையை பொருத்தவரை 9000 வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6000 ஆக குறைந்திருப்பது மன  நிறைவை தருகிறது.  இதேபோல் இந்தியாவின் பெருநகரங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.  எனவே தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாகும் இருக்குமெனவும், தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்