விஷால் முயற்சி வீண்போகல...! மிரட்டப்பட்ட தீபக்..! விசாரிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்...!

 
Published : Jan 23, 2018, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
விஷால் முயற்சி வீண்போகல...! மிரட்டப்பட்ட தீபக்..!  விசாரிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்...!

சுருக்கம்

The High Court has ordered to investigate Deepak and Sumathi.

ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதியலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.  

இந்நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டிருக்கும் போது, நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68 வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  சரியாக 4.20 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால்.

இதையடுத்து வேட்பு மனு பரிசீலனையில் அவரின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து வாபஸ் பெற்றனர். 

இதனால் கொதித்தெழுந்த விஷால் நேரடியாக தேர்தல் ஆணைய இடத்திற்கு சென்று அவர்கள் மிரட்டப்பட்டதிற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்படி அவர்கள் பேசிய வாய்ஸ் கால் ஆடியோவையும் வெளியிட்டார். 

இதனால் மனுவை ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி மீண்டும் மனுவை நிராகரித்து அறிவிப்பு வெளியிட்டார். 

இந்நிலையில் இதுகுறித்து விஷால் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதியலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!